பத்மஸ்ரீ அருள்நிதி. SKM. மயிலானந்தன் அவர்கள்
தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்
சென்னை ஆதம்பாக்கம் லேக்வியூ மனவளக்கலைமன்ற அறக்கட்டளையின் (C.A.L.M TRUST) வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த உலக சமுதாய சேவாசங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM .மயிலானந்தன் ஐயா அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்கி மகிழ்கின்றோம். தாங்கள் எமது அறிவுத்திருக்கோயில் கால்கோள்விழா, திறப்புவிழா நிகழ்ச்சிகளுக்கும் வந்து சிறப்பு செய்து அறக்கட்டளை அன்பர்களை ஊக்குவித்த இனிய நிகழ்வினை இந்நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். தங்கள் வழிகாட்டுதலில் சென்னை ஆதம்பாக்கம் லேக்வியூ மனவளக்கலை மன்றம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அறக்கட்டளை அறங்காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அருட்தொண்டர்கள், உடல் உழைப்பு, பொருள் உதவி, அருட்பணிசேவை இம்மூன்றினாலும் அர்ப்பணிப்புணர்வோடும். உற்சாகத்தோடும், ஈடுபாட்டோடும் தொண்டாற்றி வருகின்றோம். அறக்கட்டளையின் அனைத்து விதமான வளர்ச்சிக்களுக்கும், உறுதுணையாக, உள்ளன்போடு, என்றென்றும் வழிகாட்டிவரும் தங்களுக்கு, அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ஆசிரியர்கள், அன்பர்கள் அனைவரும் சேர்ந்து நெஞ்சார்ந்த நன்றியுணர்வோடு குருவின் நினைவில் நின்று தங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழ்க வளமுடன்
Chennai Adambakkam
Lakeview Manavalakkalai Mandram Trust
(CALM TRUST)